ஜெசன் ராயின் நேர்த்தியான ஆட்டம்.. வங்கதேசத்தை எளிதில் வீழ்த்தியது இங்கிலாந்து..!! புள்ளிப்பட்டியலில் முதலிடம்..!!

Author: Babu Lakshmanan
27 October 2021, 8:21 pm
England - updatenews360
Quick Share

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

அபுதாபியில் நடந்த பிற்பகலில் நடந்த லீக் ஆட்டத்தில் வங்கதேசம் – இங்கிலாந்து அணிகள் மோதின. முதலில் பேட் செய்த வங்கதேச அணி, எதிரணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. இறுதியில் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக, முஸ்தபிஷுர் ரஹிம் 29 ரன்களை குவித்தார். இங்கிலாந்து அணி தரப்பில் மில்ஸ் 3 விக்கெட்டும், மொயின் அலி, லிவிங்ஸ்டோன் தலா 2 விக்கெட்டும், கிறிஸ் வோக்ஸ் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதைத் தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணி, ஜெசன் ராய் (61) அதிரடியாக ஆட, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் குரூப் ஏ பிரிவில் 2 வெற்றிகளுடன் இங்கிலாந்து அணி முதலிடத்தை பிடித்துள்ளது. வங்கதேசம் 2 தோல்விகளுடன் 5வது இடத்தில் உள்ளது.

Views: - 552

0

0