இப்போதைக்கு டி20 உலகக்கோப்பை பற்றி பேச்சை எடுக்காதீர்கள் : ஐசிசியின் செயலால் பிசிசிஐ அதிருப்தி..!

26 June 2020, 7:26 pm
ICC - updatenews360
Quick Share

கொரோனா பரவல் காரணமாக வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெறுவதாக இருக்கும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுவது சந்தேகமாகியுள்ளது. இது தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இரண்டு முறை கூடி ஆலோசனை நடத்திய பிறகும் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

இதனிடையே, கொரோனா பாதிப்பு காரணமாக, இந்த ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரை ஆஸ்திரேலியாவில் நடத்த முடியாது என அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துவிட்டது.

இதனிடையே, நேற்று நடைபெற்ற ஐசிசி உறுப்பினர் கூட்டத்திலும், டி20 உலக கோப்பை தொடர் குறித்து விவாதிக்கப்படவில்லை.

இந்த நிலையில், ஜுலை மாதத்தின் 2 வாரத்திற்கு பிறகே டி20 உலகக்கோப்பை பற்றி முடிவு செய்யப்படும் என்றும், அதற்கு முன்பாக அதுபற்றி எந்த முடிவும் எடுக்கப்படாது என ஐசிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டு விட்டது. உலக கோப்பை ஒத்தி வைக்கப்பட்டால், ஐ.பி.எல் போட்டியை நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். ஆனால், டி20 உலகக்கோப்பை விவகாரத்தில் முடிவு எடுப்பதில் ஐசிசி தாமதம் காட்டுவதால், பிசிசிஐ அதிருப்தியடைந்துள்ளது.