டி20 உலகக்கோப்பை Update : சூப்பர் 12 சுற்றை நோக்கி முன்னேறும் ஸ்காட்லாந்து… கையை விட்டு போகும் வங்கதேசத்தின் வாய்ப்பு..!!

Author: Babu Lakshmanan
19 October 2021, 8:17 pm
scotland - updatenews360
Quick Share

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் தகுதிச் சுற்று ஆட்டத்தில் பப்புவா நியூ கினியா அணியை 17 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து அணி வீழ்த்தியது.

7வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடந்த தகுதிச் சுற்று ஆட்டத்தில் ஸ்காட்லாந்து – பப்புவா நியூ கினியா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஸ்காட்லாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஸ்காட்லாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக பெர்ரிங்டன் 70 ரன்கள் விளாசினார்.

அடுத்து பேட்டிங் செய்த பப்புவா நியூ கினியா அணி 148 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் ஸ்காட்லாந்து அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதுவரை 2 ஆட்டங்களில் விளையாடியுள்ள ஸ்காட்லாந்து அணி இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. நல்ல ரன்ரேட்டையும் வைத்துள்ள ஸ்காட்லாந்து அணி, ஏறக்குறைய சூப்பர் 12 சுற்றை நோக்கி முன்னேறிவிட்டது.

ஆனால், ஸ்காட்லாந்து அணியிடம் முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த வங்கதேச அணி, ஓமனுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் திணறி வருகிறது.

Views: - 619

0

0