திக்குமுக்காடிப் போன தென்னாப்ரிக்கா… டஃப் கொடுத்த வங்கதேசம்… இறுதியில் ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்த பவுமா…!!!
Author: Babu Lakshmanan2 November 2021, 7:12 pm
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் தென்னாப்ரிக்கா அணி வெற்றி பெற்றது.
அபுதாபியில் நடந்த இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த வங்கதேச அணி, தென்னாப்ரிக்கா பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. அந்த அணியின் மெகதி ஹாசன் (27), லிண்டன் தாஸ் (24), ஷமிம் ஹாசன் (11) ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்கு ரன்களை குவித்தனர்.
இதனால், அந்த அணிண 84 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தென்னாப்ரிக்கா அணி தரப்பில் ரபாடா, நோர்ட்ஜே ஆகியோர் தலா 3 விக்கெட்டும், ஷாம்ஷி 2 விக்கெட்டும், பிரிட்டோரியஸ் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
85 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்ரிக்கா அணியும், வங்கதேச பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் விக்கெட்டுக்களை இழந்தது. இறுதியில், டஷன் (22), பவுமா (31) ஆகியோர் நிதானமாக ஆடி, அணியை வெற்றி பெறச் செய்தனர்.
இதன்மூலம், ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்த, தென்னாப்ரிக்கா, ஏ பிரிவில் 6 புள்ளிகளுடன் 2வது இடத்தை பிடித்துள்ளது.
0
0