டி20 உலகக் கோப்பை:5 விக்கெட்டை வித்தியாசத்தில் இலங்கை அபார வெற்றி..!

Author: kavin kumar
24 October 2021, 8:09 pm
Quick Share

இலங்கை அணி 18.5 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 172 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டி20 உலக கோப்பை தொடரில் இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான சூப்பர் 12 சுற்று போட்டி ஷார்ஜாவில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணியின் தொடக்க வீரர் லிட்டன் தாஸ் 16 ரன்னிலும், அவரைத்தொடர்ந்து சீனியர் வீரர் ஷகிப் அல் ஹசன் 10 ரன்னிலும் ஆட்டமிழக்க, வங்கதேச அணி 56 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பின்னர் மற்றொரு தொடக்க வீரரான முகமது நைம் மற்றும் சீனியர் வீரரான முஷ்ஃபிகுர் ரஹீம் ஆகிய இருவரும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து அருமையாக ஆடி 3 விக்கெட்டுக்கு 73 ரன்களை குவித்தனர்.சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த நைம் 52 பந்தில் 62 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, மறுமுனையில் அபாரமாக ஆடி அரைசதம் அடித்த முஷ்ஃபிகுர் ரஹீம், 37 பந்தில் 57 ரன்கள் அடித்து கடைசி வரை களத்தில் நின்று 20 ஓவரில் வங்கதேச அணி 171 ரன்களை குவிக்க காரணமாக இருந்தார்.

இதனையடுத்து 172 ரன்கள் இலக்குடன் இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக பதும் நிஸ்ஸங்க, குசல் பெரேரா களமிறங்க ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் குசல் பெரேரா 1 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார்.அடுத்து சரித் அசலங்கா களமிறங்கினார். நிதானமாக விளையாடி வந்த தொடக்க வீரர் பதும் நிஸ்ஸங்க 24 ரன் எடுத்து ஷாகிப் அல் ஹசனிடம் போல்ட் ஆனார். பின்னர் இறங்கிய வனிந்து ஹசரங்க 6 , அவிஷ்க பெர்னாண்டோ டக் அவுட் ஆனார்கள். மத்தியில் இறங்கிய பானுகா ராஜபக்ச , சரித் அசலங்கா உடன் கூட்டணி அமைத்து அதிரடியாக விளையாடினர். இருவருமே அரைசதம் விளாசி கடைசிவரை களத்தில் நின்றனர்.அதிரடியாக விளையாடி வந்த சரித் அசலங்கா 80* ரன்கள் எடுத்தார். அதில் 5 பவுண்டரி, 5 சிக்ஸர் அடங்கும். பானுகா ராஜபக்ச 53* ரன்கள் எடுத்தார். அதில் 3 பவுண்டரி, 3 சிக்ஸர் அடங்கும். இறுதியாக இலங்கை அணி 18.5 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 172 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Views: - 585

0

0