போலீஸ் அதிகாரிகளுக்கு ஆதரவாக களமிறங்கும் பிரபல கபடி தமிழ் தலைவாஸ் நட்சத்திரம்…!

26 March 2020, 6:46 pm
Quick Share

சீனாவில் உருவெடுத்த கொரோனா வைரஸால் இந்தியா உட்பட பல நாடுகளில் பிணங்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்த சூழ்நிலையிலிருந்து இந்தியாவை காக்க பிரதமர் மோடி இந்திய மக்களை அடுத்த 21 நாட்களுக்கு ஊடரங்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். மேலும் இந்த விதியினை மீறினால் கடும் தண்டனைக்கு உள்ளாவீர்கள் என்று பல மாநிலங்கள் அறிவித்திருந்தது.


இதற்காக போலீஸ் அதிகாரிகள் அவர்களது பணியை சிறப்பாக செய்துவந்தால் சில இடங்களில் எல்லைகளை மீறி பொதுமக்களை துன்புறுத்தி வருகின்றனர். அதனால் தற்போது போலீஸ் அதிகாரிகளையும் மேலதிகாரிகள் கண்டித்துவருகின்றனர். இந்நிலையில் கடந்த ஆண்டுகளில் ப்ரோ கபடி லீக்கில் விளையாடிய பிரபலம் போராட்ட களத்தில் இறங்கியுள்ளார்.


பத்மஸ்ரீ விருதிற்கு சொந்தக்காரரான அஜய் தாகூர் ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலத்திலுள்ள பிலாஸ்பூர் நகரத்தின் டெபுடி கமிஷனர் பட்டதில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றிவருகிறார். இவர் அந்நகர்ப்புறத்திற்கு நேரில் சென்று அங்குள்ள மக்களை கண்டு அவர்களை வீட்டை விட்டு வெளியே வரக்கூடாதென்று பணிவுடன் கேட்டுக்கொண்டு வந்துள்ளார்.

Leave a Reply