முதல்முறையாக இந்தியாவை நெஞ்சில் சுமந்த தருணம் : புதிய ஜெர்சியை அணிந்து தமிழக வீரர் நடராஜன் வெளியிட்ட புகைப்படம்..!!

25 November 2020, 8:22 pm
natarajan - updatenews360
Quick Share

ஐபிஎல் தொடரை முடித்த கையோடு, நவ.,12ம் தேதி இந்திய கிரிக்கெட் வீரர்கள், ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். அங்கு தலா 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுடன் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் வரும் 27ம் தேதியும், டிச.,17ம் தேதி டெஸ்ட் தொடரும் தொடங்குகிறது.

முழுக்க முழுக்க இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தும் முனைப்புடன் உள்ளனர். இந்த இளம்படையில் தமிழக வீரர் நடராஜனும் இடம்பிடித்துள்ளார். முதல்முறையாக இந்திய அணிக்காக களம்காண இருக்கும் அவரது ஆட்டத்தை காண ரசிகர்கள் ஆர்வத்தில் உள்ளனர்.

இந்த நிலையில், முதல்முறையாக இந்திய அணியின் ஜெர்சியை அணிந்த நடராஜன், அந்தப் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ‘ஸ்பெஷல் ஜெர்சியை போடுவதில் சிறப்பான உணர்வு’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 0

0

0