இரண்டு வருஷத்துக்கு பின் இப்படி ஒரு மோசமான சாதனை படைத்த இந்திய அணி!

Author: Udhayakumar Raman
13 March 2021, 12:26 pm
Quick Share

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணிக்குப் படுமோசமான சாதனையைப் படைத்துள்ளது.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் டி-20 போட்டியில் இங்கிலாந்து அணி, இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலை பெற்றது. இரு அணிகள் மோதும் இரண்டாவது டி -20 போட்டி நாளை இதே மைதானத்தில் நடக்கிறது.

கொஞ்சம் கூட வாய்ப்பே இல்ல ராஜா… வருண் சக்கரவர்த்தி விஷயத்தில் விராட் கோலி விளக்கம்!

மோசமான சாதனை
இந்நிலையில் முதல் போட்டியில் தோல்வியைச் சந்தித்த இந்திய அணி படுமோசமான சாதனையைப் படைத்துள்ளது. இந்த தோல்வியின் மூலம் இந்திய கிரிக்கெட் அணி தொடர்ச்சியாகச் சொந்த மண்ணில் இரண்டாவது தோல்வியைப் பதிவு செய்தது. கடந்த 2020இல் இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராகப் பங்கேற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரின் கடைசி போட்டியில் தோல்வியடைந்தது.

2 ஆண்டுகளுக்குப் பின்
இந்நிலையில் கடந்த நவம்பர் 2019க்கு பின் இந்திய கிரிக்கெட் அணி முதல் முறையாக அடுத்தடுத்த டி -20 போட்டிகளில் தோல்வியை முதல் முறையாகச் சந்தித்துள்ளது. அப்பொழுது தென் ஆப்ரிக்கா மற்றும் வங்கதேச அணிகளுக்கு எதிராக இந்திய அணி சொந்தமண்ணில் இரு தோல்விகளைப் பதிவு செய்தது.

இந்த மட்டமான இந்திய டீமிற்கு மும்பை இந்தியன்ஸ் டீம் பெட்டர்: சீண்டிய முன்னாள் இங்கிலாந்து கேப்டன்!

இந்தியாவில் இந்தாண்டின் பிற்பகுதியில் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதற்குத் தயாராகும் விதமாக இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான டி-20 தொடரிலும் அடுத்து நடக்கவுள்ள ஐபிஎல் தொடரிலும் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதும் இரண்டாவது டி-20 போட்டி நாளை நடக்கிறது. இந்த தொடரின் ஐந்து டி -20 போட்டிகளுமே அகமதாபாத் மைதானத்தில் நடக்கிறது.

Views: - 171

0

0

1 thought on “இரண்டு வருஷத்துக்கு பின் இப்படி ஒரு மோசமான சாதனை படைத்த இந்திய அணி!

Comments are closed.