ஹாக்கி: சிலி சீனியர் அணியை வீழ்த்திய இந்திய ஜூனியர் பெண்கள் அணி!

24 January 2021, 9:08 pm
Quick Share

சிலி சீனியர் அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் இந்திய ஜூனியர் பெண்கள் அணி 2 – 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அசத்தியது.

பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் கண்ட்ரி கிளப்பில் நடக்கும் பயிற்சிப் போட்டியில் இந்திய ஜூனியர் பெண்கள் ஹாக்கி அணி தனது வெற்றி நடையை சீனியர் சிலி அணிக்கு எதிராகத் தொடர்ந்து வருகிறது. சிலி அணிக்கு எதிராக தனது 5வது போட்டியில் பங்கேற்ற இந்திய ஜூனியர் பெண்கள் துவக்கம் முதலே அசத்தினர்.

இதில் இந்திய அணி சார்பாக சங்கீதா குமாரி (48வது நிமிடம்) சுஸ்மா குமாரி (56வது நிமிடம்) ஆகியோர் கடைசி பகுதியில் இரண்டு கோல்கள் அடித்த இந்திய பெண்கள் அணி அபாரமான வெற்றியைப் பதிவு செய்தது. முதல் மூன்று கால் பகுதியில் நடந்த போட்டியில் இரு அணி வீராங்கனைகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. பெரும்பாலான நேரத்தில் இரு அணி வீராங்கனைகளும் தடுப்பாட்டத்தில் அதிகம் கவனம் செலுத்தினார்.

இந்நிலையில் இரண்டாவது கால் பகுதி போட்டியில் இந்திய பெண்கள் மிகவும் நெருக்கடியை எதிர் கொண்டனர். அடுத்தடுத்து எதிரணிக்கு இரண்டு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைக்க இந்திய அணிக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டது. ஆனால் உள்வட்டத்திற்குள் சிறப்பான திட்டத்தை இந்திய பெண்கள் செயல்படுத்த எதிரணி வீராங்கனைகளின் கோல் முயற்சி கைகொடுக்கவில்லை. அதேபோல மூன்றாவது கால் பகுதி ஆட்டத்தில் இந்திய அணிக்குக் கிடைத்த பெனால்டி வாய்ப்பை சீனியர் சிலி அணி வீராங்கனைகள் அசத்தலாகத் தடுக்க, இந்திய வீராங்கனைகளால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை.

ஆனால் கடைசி கால நேரம் பகுதி ஆட்டத்தில் எழுச்சி பெற்ற இந்திய வீராங்கனைகள் அடுத்தடுத்து இரண்டு கோல் அடித்து அசத்த சிலி அணி வீராங்கனைகளால் பதிலடி கொடுக்க முடியவில்லை. இதன் மூலம் இந்திய அணி கடைசி நேரத்தில் 2 – 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அசத்தியது. மேலும் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 4-வது வெற்றியைப் பதிவு செய்து மிரட்டியது.

Views: - 0

0

0