இரண்டாவது டெஸ்டில் திறக்கப்படும் சேப்பாக்க மூன்று கேலரிகள்!

7 February 2021, 2:20 pm
Quick Share

சென்னை சேப்பாக்க மைதானத்தில் கடந்த 2012 முதல் மூடிக்கிடக்கும் ஐ, ஜே, மற்றும் கே கேலரிகள் ரசிகர்களுக்குத் திறக்கப்படவுள்ளது.

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியும் சென்னை சேப்பாக்க மைதானத்தில் நடக்கவுள்ளது. இந்த போட்டிக்கு ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படும் எனத் தெரிகிறது.

இந்தியாவில் கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்காகச் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் அரங்கத்தில் புதிதாக ஐ, ஜே, மற்றும் கே என மூன்று கேலரிகள் கட்டப்பட்டது.

இந்த மூன்று கேலரிகளில் 12 ஆயிரம் இருக்கைகளுக்கு மேல் அமைக்கப்பட்டன. இவை அனுமதியில்லாமல் கட்டப்பட்டதாக புகார் எழுந்தது. இதனால் சென்னை மாநகராட்சி சீல் வைத்தனர். இந்நிலையில் மாநகராட்சி அறிவுறுத்திய மாற்றங்களை கிரிக்கெட் நிர்வாகம் மறுசீரமைப்பு செய்ததால் இந்த கேலரிகளுக்கும் விதிக்கப்பட்ட தடை சமீபத்தில் நீக்கப்பட்டது. இதற்கிடையில் கடந்த 2012 இல் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மீண்டும் திறக்கப்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

இதற்குப் பின்னும் 2016 இல் டி-20 உலகக்கோப்பை, 2019 இல் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் என பல்வேறு போட்டிகள் சென்னையில் நடக்க வாய்ப்பு கிடைத்த போதும் இந்த கேலரிகள் திறக்கப்படவில்லை. இந்நிலையில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட்[ போட்டிக்கு சுமார் 15,000 டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும். இந்த கேலரிகளில் அமர்ந்து போட்டியை ரசிக்க ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படும் எனத் தெரிகிறது.

இந்த டிக்கெட்டுகள் அனைத்தும் ஆன் லைன் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் தற்போது முதலே சேப்பாக்க மைதானத்தில் உள்ள கேலரிகளை சுத்தம் செய்யும் பணிகளும் நடந்து வருவதாகத் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Views: - 0

0

0