டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் அநேகமாக ‘இந்த காலகட்டத்தில்’ நடக்க வாய்ப்பு : தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்!!

1 August 2020, 1:04 pm
tnpl - updatenews360
Quick Share

சென்னை : கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்டுள்ள டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி குறித்த முக்கிய அறிவிப்பை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ளது.

டி.என்.பி.எல். எனப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி கடந்த ஜுன் மாதம் 10ம் தேதி முதல் ஜுலை 12ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, உலக விளையாட்டு தொடர்களே நடத்த முடியாத நிலையில், டி.என்.பி.எல். கிரிக்கெட்டை மட்டும் எதிர்பார்த்திருக்கவா முடியும். இந்தத் தொடரும் காலவரையறையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.

இதனிடையே, ஊரடங்கு 5 மாதத்திற்கும் மேலாக நீடிக்கப்பட்டு வரும் நிலையில், டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரை எப்போது நடத்துவது என்பது குறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஆலோசனை நடத்தியது.

இந்த ஆலோசனையின் முடிவில், டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரை தற்போது நடத்த வாய்ப்பில்லை என்றும், ஒரு வேளை சாத்தியக்கூறுகள் உருவாகும்பட்சத்தில் நவம்பர் மாதம் அல்லது அடுத்த ஆண்டு மார்ச் மாதம் போட்டிகள் நடத்தப்பட வாய்ப்புள்ளது என கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Views: - 0

0

0