தோல்விக்கு முடிவு கட்டுமா பஞ்சாப்..? பழி தீர்க்குமா பெங்களூரூ..? இன்று பரபரப்பான ஆட்டம்..!!!

15 October 2020, 5:51 pm
gayle-de-villiers-ipl - updatenews360
Quick Share

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்றைய பரபரப்பான லீக் ஆட்டத்தில் பஞ்சாப் – பெங்களூரூ அணிகள் இன்று மோதுகின்றன.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கிட்டத்தட்ட பாதி கட்டத்தை கடந்து விட்டது. இதுவரையில் நடைபெற்ற ஆட்டங்கள் வரையில், 7 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரூ அணி, 5 வெற்றிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. தொடரை தோல்வியில் ஆரம்பித்தாலும், தற்போது அந்த அணியின் முக்கிய வீரர்கள் நல்ல ஃபார்மில் உள்ளனர். பேட்டிங்கில் பிஞ்ச், படிக்கல், கோலி, டிவில்லியர்ஸ் ஆகியோரும், பந்து வீச்சில் சஹால், வாஷிங்டன் சுந்தர், மோரிஸ், உதனா ஆகியோரும் அணிக்கு வலு சேர்க்கின்றனர்.

அதேவேளையில், 7 ஆட்டங்களில் ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பதிவு செய்துள்ள பஞ்சாப் அணிக்கு எஞ்சிய அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. லோகேஷ் ராகுல், மயங்க் அகர்வால், பூரன் உள்ளிட்டோரும் நல்ல ஃபார்மில் இருந்தும், ஏனைய வீரர்களின் சொதப்பலினால் வெற்றி எட்டாக் கனியாகவே இருந்து வருகிறது.

இந்த சீசனில் இதுவரையில் களமிறங்காத சிக்சர் மன்னன் கெய்ல் இந்தப் போட்டியில் களமிறங்குவார் என்று தெரிகிறது. அவரது வருகை பஞ்சாப் அணியின் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்குமா..? என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

மேலும், பஞ்சாப் அணி வென்றுள்ள ஒரு போட்டியும், பெங்களூரூ அணிக்கு எதிராக என்பதால், அதே நம்பிக்கையுடன் இந்தப் போட்டியில் களமிறங்கும் எனத் தெரிகிறது.