டோக்கியோ ஒலிம்பிக்கில் பறந்த இந்தியக் கொடி… கம்பீர நடைபோட்ட வீரர், வீராங்கனைகள்…!!! (வீடியோ)

Author: Babu
23 July 2021, 6:24 pm
olympic - updatenews360
Quick Share

டோக்கியோ ஒலிம்பிக் தொடக்க விழாவில் இந்தியா உள்பட 204 நாடுகளின் கம்பீர அணிவகுப்பு நடைபெற்றது.

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் ஜப்பானின் டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டி இன்று தொடங்கியுள்ளது. இந்தியா, அமெரிக்கா, சீனா, ஜப்பான் என பல்வேறு உலக நாடுகளில் இருந்தும் சுமார் 11,200க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்தியா சார்பில் 127 வீரர், வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளனர். ஒரு ஒலிம்பிக்கில் இந்திய வீரர்கள் பங்கேற்கும் அதிகபட்ச எண்ணிக்கை இதுதான்.

டென்னிஸ், துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், குத்துச்சண்டை, பேட்மிண்டன், வில்வித்தை, ஹாக்கி என மொத்தம் 18 விளையாட்டுக்களில் பங்கேற்க இருக்கின்றனர். ஒலிம்பிக் கிராமத்தில் சுமார் 90 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ள நிலையில் தொடக்க நிகழ்ச்சியில் ஒரு நாட்டின் சார்பில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கையில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், டோக்கியோவில் உள்ள தேசிய ஸ்டேடியத்தில் கோலாகலமாக தொடங்கியது. மேடைக்கு ஒலிம்பிக் சங்க தலைவர் தாமஸ் பாக் வருகை தந்தார். டோக்கியோ ஒலிம்பிக் தொடக்க்கவிழாவில் சிறப்பு விருந்தினராக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மனைவி ஜில் பைடன், பிரான்ஸ் அதிபர் மேக்ரான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முதலில் ஜப்பானின் தேசிய கீதம் பாடப்பட்டு, பின்னர் ஜப்பானின் தற்காப்பு கலைஞர்களின் பாடல் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள 204 நாட்டு அணியினரும் தங்களது தேசிய கொடியுன் மிடுக்காக அணிவகுத்து செல்ல தொடங்கினர்.

முதலில் ஜப்பானிய தேசியக் கொடி முதலில் கொண்டு வரப்பட்டது. பிறகு, அணிவகுப்பில் முதல் நாடாக ஒலிம்பிக்கை தோற்றுவித்த கிரீஸ் நாடு செல்கிறது. இந்திய அணிக்கு தலைமை தாங்கிய குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம், இந்தியா ஆக்கி அணியின் கேப்டன் மன்ப்ரீத்சிங் ஆகியோர் இந்திய தேசிய கொடியை ஏந்திச் சென்றனர். இந்திய தரப்பில் 6 அதிகாரிகள், 19 வீரர், வீராங்கனைகள் மட்டும் கலந்து கொண்டுள்ளனர்.

Views: - 284

0

0