டோக்கியே ஒலிம்பிக் போட்டி : தமிழக வீராங்கனை இளவேனில் தேர்வு

5 April 2021, 6:04 pm
Quick Share

டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணிக்காக பங்கேற்க தமிழக வீராங்கனை இளவேனில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் இந்த ஆண்டு ஜுலை 23ம் தேதி முதல் ஆகஸ்ட் 8ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கிச் சுடுதலில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இந்திய அணியை தேர்வு செய்யும் பணிகள் கடந்த சில தினங்களாக நடைபெற்றது.

இந்த நிலையில், தமிழகத்தின் கடலூரைச் சேர்ந்த துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலறிவன், மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் வெற்றி பெற வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

Views: -

0

0