Olympic Update : வில்வித்தை, துப்பாக்கிச்சுடுதலில் இந்தியா ஏமாற்றம்… பேட்மிண்டன், டேபிள் டென்னிஸில் அபாரம்..!!

By: Babu
24 July 2021, 1:49 pm
indian archery - updatenews360
Quick Share

டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் வில்வித்தை மற்றும் துப்பாக்கிச்சுடுதல் போட்டிகளில் இந்திய வீரர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று தொடங்கியது. இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்பட 205 நாடுகள் மற்றும் அகதிகள் அணி ஆகியவற்றை சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இந்த விளையாட்டு திருவிழாவில் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 127 பங்கேற்றுள்ளனர்.

இன்று காலை நடந்த வில்வித்தை காலிறுதி போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய இணை அதிர்ச்சி தோல்வியடைந்தது. 6-2 என்ற கணக்கில் தென்கொரியா இணையிடம் இந்தியாவின் தீபிகா குமாரி, பிரவீன் ஜாதவ் ஜோடி அதிர்ச்சி தோல்வியடைநத்து. இதேபோல, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒலிம்பிக் ஆடவர் ஒற்றையர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியின் இறுதிச்சுற்றில் சவுரவ் சவுத்ரி தோல்வி கண்டு ஏமாற்றம் அளித்தார்.

டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீராங்கனை மனிகா பத்ரா வெற்றி பெற்றுள்ளார். முதல் சுற்றில் பிரிட்ன் வீராங்கனை டின்டின் ஹோவை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார். அடுத்த சுற்றில் உலகின் 32வது இடத்தில் இருக்கும் உக்ரைன் வீராங்கனை மர்கரிடாவை எதிர்த்து விளையாட உள்ளார்.

ஆடவர் இரட்டையர் பேட்மிண்டன் குரூப் ஏ பிரிவு முதல் ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் – சிரக் ஷெட்டி இணை வெற்றி பெற்றுள்ளனர். 21-16, 16-21,27-25 என்ற செட் கணக்கில் சீன -தைபே ஜோடியை தோற்கடித்தனர். இதேபோல, ஹாக்கி போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்தை தோற்கடித்தது.

Views: - 221

0

0