டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 2வது வெள்ளி : மல்யுத்தம் இறுதிப்போட்டியில் போராடி வீழ்ந்த ரவிக்குமார்…!!

By: Babu
5 August 2021, 4:54 pm
ravikumar - updatenews360
Quick Share

டோக்கியோ ஒலிம்பிக்கின் மல்யுத்தம் இறுதிப் போட்டியில் ரஷ்ய வீரரிடம் தோல்வியடைந்த இந்திய வீரர் ரவிக்குமார் தாஹியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக்கில் மீராபாய் சானு, பிவி சிந்து மற்றும் லவ்லினா ஆகியோரின் வெற்றியைத் தொடர்ந்து, அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகளில் அடுத்தடுத்து இந்திய வீரர்கள் தோல்வியை தழுவியது இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தது.

இந்த சூழலில், நேற்று நடைபெற்ற மல்யுத்தம் ஆடவர் 57 கிலோ உடல் எடை ஃப்ரீஸ்டைல் பிரிவில் கஜகஸ்தான் வீரர் நூரிஸ்லாம் சனயேவை, 5-9,7-9 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்கடித்த இந்திய வீரர் ரவிக்குமார் தாஹியா இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

இந்நிலையில், தங்கப் பதக்கத்திற்காக நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியாவின் ரவிக்குமார் தாஹியா, ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டியைச் சேர்ந்த ஜவுர் உகேவை எதிர்கொண்டு விளையாடினார். பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் 7-4 என்ற புள்ளிகள் கணக்கில் இந்திய வீரர் ரவிக்குமார் போராடி வீழ்ந்தார். இதன்மூலம், இந்தியாவுக்கு 2வது வெள்ளியையும், மொத்தமாக 5வது பதக்கத்தையும் அவர் பெற்றுக் கொடுத்துள்ளார்.

இதன்மூலம், 2 வெள்ளி, 3 வெண்கலத்துடன் பதக்கப்பட்டியலில் இந்தியா 62வது இடத்தில் உள்ளது.

Views: - 375

1

0