டோக்கியோவில் மாஸ் காட்டும் இந்திய ஹாக்கி அணி… ஜப்பானை சொந்த மண்ணில் வீழ்த்தி அபாரம்..!!

Author: Babu
30 July 2021, 5:55 pm
indian hockey team - updatenews360
Quick Share

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் ஹாக்கி லீக் ஆட்டத்தில் ஜப்பானை 5-3 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான ஹாக்கி லீக் போட்டிகள் இன்று நடைபெற்றது. லீக் சுற்றின் 27வது போட்டியில் இந்தியா – ஜப்பான் அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கிய 13வது நிமிடத்தில் இந்திய வீரர் ஹர்மன்பிரீத் சிங் தனது முதல் கோலை அடித்தார். பின்னர் 2வது பாதியின் ஆட்டத்தில் 17வது நிமிடத்தில் இந்திய வீரர் குர்ஜந்த் சிங் 2வது கோலை அடித்து உற்சாகப்படுத்தினார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று ஆண்கள் ஆக்கி லீக் சுற்றுகள் நடைபெற்றது. லீக் சுற்றின் 27-வது போட்டியில் ஜப்பான் அணியை இந்திய அணி எதிர்கொண்டது. போட்டி தொடங்கிய 13-வது நிமிடத்தில் இந்திய வீரர் ஹர்மன்பிரீத் சிங் முதல் கோல் அடித்தார். தொடர்ந்து ஆட்டத்தின் 2-வது கால் பகுதியில் 17-வது நிமிடத்தில் இந்திய வீரர் குர்ஜந்த் சிங் ஒரு கோல் அடித்தார். இதற்கு ஜப்பான் வீரர் டனகா மற்றும் ஹுடனபி அடுத்தடுத்து கோல் அடித்து பதிலடி கொடுத்தனர்.

இரு அணியினரும் 2-2 என்ற கணக்கில் சமநிலை வகித்து வந்த நிலையில், இந்திய அணி அடுத்தடுத்து இருகோல்களை அடித்து அசத்தினார். அதேவேளையில் ஜப்பானால் ஒரு கோல் மட்டுமே அடிக்க முடிந்தது.

இறுதியில் ஜப்பானை 5-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது. இந்திய அணி ஏற்கனவே காலிறுதிக்கு தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Views: - 263

0

0