டோக்கியோ பாராலிம்பிக் : காலிறுதியில் இந்தியாவின் டேபிள் டென்னிஸ் வீராங்கனை பவீனா படேல்..!!!

Author: Babu Lakshmanan
27 August 2021, 11:20 am
bhavina patel - updatenews360
Quick Share

டோக்கியோ பாராலிம்பிக் போட்டியின் டேபிள் டென்னிஸ் ஆட்டத்தில் இந்தியாவின் பவீனா படேல் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16வது பாராலிம்பிக் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியிர் இந்தியா, அமெரிக்கா உள்பட 162 நாடுகளைச் சேர்ந்த 4,403 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

டோக்கியோ பாராலிலிம்பிக் போட்டியின் 4வது நாளான இன்று, டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் பவீனா பட்டேல் அமர்ந்த நிலையில், ஜாய்ஸ் டி ஒலிவியராவுடன் விளையாடினார். இந்த போட்டியில் வெற்றி பெற்ற பவீனா காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

Views: - 380

0

0