டி-20 உலகக்கோப்பையை இந்தியாவில் இருந்து மாற்றுங்கள்: பாக் போர்டு தலைவர்!

28 February 2021, 3:16 pm
Quick Share

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்களுக்கு விசா வழங்குவதை இந்திய கிரிக்கெட் போர்டு உறுதி செய்யவில்லை என்றால் டி-20 உலகக் கோப்பை தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த வேண்டும் எனப் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் இஷான் மணி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு நடக்கவிருந்த ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த ஆண்டு மாற்றப்பட்டது. இந்தாண்டு நடத்தப்பட வேண்டிய ஆசியக் கோப்பை தொடருக்கான தேதி ஐசிசி ஆல் நடத்தப்படும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் பைனல் நடக்கும் தேதியுடன் மோதுவதால் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 2023 ஆம் ஆண்டு ஒத்திவைக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் இஷான் மணி தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு ஜூன் மாதம் ஆசியக் கோப்பை தொடர் நடத்தப்படுவதாக இருந்தது. இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடரில் கடைசி டெஸ்டில் இந்திய அணி போட்டியில் வெற்றி அல்லது டிரா செய்தாலே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன்னேறி விடும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி ஜூன் மாதம் இங்கிலாந்தில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடக்க உள்ளது. இதனால் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 2023-ம் ஆண்டுக்கு மாற்றப்படும் எனப் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் இஷான் மணி உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இஷான் மணி கூறுகையில், “ கடந்த ஆண்டு இலங்கையில் நடக்கவிருந்த ஆசியக் கோப்பை தொடரை மாற்றிக்கொண்டோம். கொரோனா வைரஸ் கடந்தாண்டு பரவியதால் இந்த மாற்றம் ஏற்பட்டது. ஆனால் தற்போது இந்த தொடருக்கான தேதிகள் உலக டெஸ்ட் தொடருடன் மோதுவதால், 2023 ஆம் ஆண்டுக்கு ஒத்திவைப்பதாக முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவில் நடக்கும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் பாகிஸ்தான் உறுப்பினர்களுக்கு விசா குறித்த உறுதியை பிசிசிஐ அளிக்கவில்லை என்றால் அந்த தொடரை நடுநிலையான ஐக்கிய அரபு அமீரகத்தில் மாற்றப்படவேண்டும்” என்றார்.

இதற்கிடையில் வரிச்சலுகை குறித்து பிசிசிஐ இந்திய அரசுடன் போராடி வருகிறது. இதனால் இந்த விஷயத்தில் உலகக் கோப்பை தொடரை எப்படி பிசிசிஐ நடத்த உள்ளது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Views: - 22

0

0