“அனைவரும் கையை பயன் படுத்தாமல் விசில் அடியுங்கள்” – சென்னை சூப்பர் கிங்ஸ் அணி போட்ட கொரோனா ட்வீட்…!

22 March 2020, 9:50 am
Quick Share

இந்தியாவில் கொரோனா வைரஸால் 260 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐந்து பேர் இறந்துள்ளனர். இரண்டாம் கட்ட பாதிப்பில் இருக்கும் இந்தியா மூன்றாம் கட்டத்திற்கு செல்லகூடாதென்பதற்காக இந்திய அரசு இன்று காலை ஏழு மணிமுதல் இரவு ஒன்பது மணிவரை யாரும் வெளியே செல்லகூடாதென்னும் விதியை “ஜனதா Curfew” என்னும் பெயரில் அனைவரையும் பின் பற்ற வலியுறுத்தினார்.


ஏற்கனவே கொரோனாவால் வரும் 29 ஆம் தேதியன்று தொடங்கவிருந்த IPL போட்டிகள் ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிலை தொடர்ந்தால் IPL ஜூலை மாதத்தில் நடக்கலாமென்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸின் பாதிப்பின் போது கிரிக்கெட் ரசிகர்கள் எப்படி இருக்கவேண்டுமென்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு ட்வீட் செய்துள்ளது.


“அனைவரும் இந்த நேரத்தில் தங்களுடைய குகை(வீட்டை) விட்டு வெளியே வராதீர்கள்.அனைவரும் கையை பயன் படுத்தாமல் விசில் அடித்து IPL போட்டிக்காக காத்திருங்கள். விரைவில் உங்களை வந்து சந்திக்கின்றோம்” என்று கூறியுள்ளனர். IPL போட்டிகள் நடக்காமல் போனால் இந்திய பொருளாதாரத்தில் பெரும் பின்னடைவு ஏற்படுமென்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Leave a Reply