அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜெர்மனியின் ஸ்வரேவ்வை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ஜோகோவிச்!!

By: Aarthi
11 September 2021, 1:02 pm
Quick Share

நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ஜோகோவிச். இறுதிப்போட்டியில் ரஷ்ய வீரர் மெத்வதேவை ஜோகோவிச் எதிர்கொள்ள உள்ளார்.

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதி ஆட்டம் ஒன்றில் செர்பிய வீரர் ஜோகோவிச், ஜெர்மனியின் ஸ்வரேவ்வுடன் மோதினார்.

மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் தரவரிசையில் முதலிடத்தில் வகிக்கும் ஜோகோவிச்சுக்கு 4ம் நிலை வீரரான ஸ்வரேவ் கடும் சவால் அளித்தார். எனினும், சுதாரித்து விளையாடிய ஜோகோவிச் 4-6, 6-2, 6-4,4-6, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

இதன் மூலம் இறுதிப்போட்டிக்கு ஜோகோவிச் முன்னேறினார். இறுதிப்போட்டியில் ரஷ்ய வீரர் மெட்வதேவை ஜோகோவிச் எதிர்கொள்கிறார். இதுவரை 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள ஜோகோவிச், 4வது முறையாக அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்ல முனைப்பு காட்டி வருகிறார்.

Views: - 354

0

0