அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி : டொமினிக் திம் சாம்பியன்!!

14 September 2020, 11:15 am
US open - updatenews360
Quick Share

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவு போட்டியில் டொமினிக் திம் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்றது. இதில், ஜெர்மனியைச் சேர்ந்த அலெக்சாண்டர் ஸ்வெரேவ்- ஆஸ்திரேலியாவின் டொமினிக் திம் பலப்பரீட்சை நடத்தினர். சுமார் 4 மணி நேரம் பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், 2-6, 4-6, 6-4, 6-3, 7-6 (6) என்ற கணக்கில் வென்று ஆஸ்திரியாவைச் சேர்ந்த டொமினிக் தீம் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

இதுவரையில் 10 முறை இருவரும் நேருக்கு நேர் மோதியதில், டொமினிக் திம் 8 முறையும், அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 2 தடவையும் வென்றுள்ளனர்.

Views: - 0

0

0