ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்டுக்கு கொரோனா

24 August 2020, 11:12 pm
Quick Share

லண்டன்: ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்டுக்கு கொரோனா தொற்றுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜமைக்கா நாட்டைச் சேர்ந்தவர் உசேன் போல்ட் மின்னல் வேக ஒட்டத்தால் உலகமுழுவதும் ரசிகர்களை கவர்ந்துள்ளார். இதையடுத்து உசேன் போல்ட் பங்கேற்கும் அனைத்து போட்டிகளும் பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கும். 100 மற்றும் 200 மீட்டர் ஓட்ட பந்தயங்களில் உலக சாதனை படைத்த உசேன் போல்ட் 14 உலக சாம்பியன் பதக்கங்களையும், 8 ஒலிம்பிக்க பதக்கத்துடன் தனது சர்வதேச தடகள விளையாட்டு போட்டிகளில் இருந்து சில ஆண்டுகளுக்கு முன் விடை பெற்றார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் தனது 34-வது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது அவருடன் இங்கிலாந்து கால்பந்து வீரர் ரஹீம் ஸ்டெர்லிங் மற்றும் நெருங்கிய நண்பர்கள் பல்வேறு விளையாட்டு பிரபலங்களும் பங்கேற்றனர். உடல் நலம் பாதிக்கப்பட்டதையடுத்து நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து சமூகவலைதளத்தில் கொரோனா தொற்றால் தாம் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Views: - 97

0

0