தந்தையான மின்னவேக மனிதர்…குஷியில் ரசிகர்கள்..!

19 May 2020, 6:16 pm
bolt - updatenews360
Quick Share

ஒலிம்பிக் போட்டிகளில் ஓட்டப்பந்தயம் என்றாலே நினைவிற்கு வருபவர் ஜமைக்காவின் உசேன் போல்ட். இவர், ஒலிம்பிக்கில் 100 மீட்டர் ஓட்டத்தை 9.58 விநாடிகளில் ஓடி உலக சாதனை செய்துள்ளார். இதைத் தொடர்ந்து, 100 மீ. ஓட்டம், 200 மீ. ஓட்டம், 400 மீ தொடர் ஓட்டம் ஆகியவற்றில் உலக சாதனை படைத்து உள்ளார். இதனால், இவரை மின்னல் வேக மனிதர் என அழைக்கப்பட்டு வருகிறார்.

இதுவரை ஒலிம்பிக்கில் 8 முறை தங்கப்பதக்கங்களை வென்று ஜமைக்காவிற்கு பெருமை சேர்த்துள்ளார். 2008,2012,2016 ஒலிம்பிக் தொடரை கலக்கி வந்த இவர், 2017 உலக சாம்பியன்ஷிப் போட்டிக்குப் பிறகு ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார்.

இந்தநிலையில் உசைன் போல்ட்டின் காதலி காசி பென்னட் பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். உசைன் போல்ட் தந்தையானது குறித்த தகவலை ஜமைக்கா பிரதமர் ஆண்ட்ரூ ஹோல்னஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply