சச்சினின் 17 ஆண்டுகள் சாதனை தகர்ப்பு : கிரிக்கெட்டில் புதிய சகாப்தத்தை படைக்கும் கோலி..!!

2 December 2020, 11:15 am
sachin - kohli - updatenews360
Quick Share

ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2 போட்டிகளில் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய அணி தொடரை கைப்பற்றி விட்டது. எஞ்சிய கடைசி ஒருநாள் போட்டி இன்று நடந்து வருகிறது.

இந்தப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. அதில், கேப்டன் கோலி 23 ரன்கள் எடுத்திருந்த போது, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அதிவேகமாக 12 ஆயிரம் ரன்களை கடந்தார். இதன்மூலம் 17 ஆண்டுகளாக இருந்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை அவர் முறியடித்துள்ளர்.

வெறும் 251 இன்னிங்சில் விராட் கோலி 12 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார். இதற்கு அடுத்தபடியாக, சச்சின் டெண்டுல்கர் (300), ரிக்கி பாண்டிங் (314), சங்கக்காரா (336), ஜெயசூர்யா (379) ஆகியோர் உள்ளனர்.

Views: - 34

0

0