ரோகித்துடன் களமிறங்கும் துவக்கவீரர் ராகுலா? தவானா? : விளக்கம் அளித்த கோலி!

22 March 2021, 7:30 pm
Quick Share

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க வீரர்கள் யார் யார் என்பதை இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடர், டி20 தொடர்களை முடித்து தற்போது ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளது. இதன் முதல் போட்டி நாளை தொடங்குகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் ஏற்கனவே புனே சென்றடைந்துள்ளனர். முதல் ஒருநாள் போட்டி நாளை துவங்க உள்ள நிலையில் இதற்கு முன்பாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற இந்திய கேப்டன் விராட் கோலி அணியின் துவக்க வீரர்கள் யார் யார் என்பதை உறுதி செய்துள்ளார்.

ரோகித் சர்மா உறுதியான துவக்க வீரர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால் டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மாவுக்கு துணையாக இறங்கிய வீரர்கள் சரியாக செயல்படாததை காணமுடிந்தது. இதனால் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் இடம் பெற்றுள்ள மற்றொரு துவக்க வீரர் ஷிகர் தவான் மற்றும் கே எல் ராகுல் ஆகியோரில் யார் ரோகித் சர்மாவுடன் களமிறங்குவார் என்ற மிகப் பெரிய கேள்வி எழுந்தது. இதற்கு பதில் அளிக்கும் விதமாக இந்திய கேப்டன் விராட் கோலி ரோகித் சர்மா, ஷிகர் தவான் தான் களமிறங்குவார்கள் என்பதை உறுதி செய்துள்ளார்.

சச்சின், ரிக்கி பாண்டிங் சாதனைகளை தகர்ப்பாரா ‘கிங்’ கோலி!

இதுதொடர்பாக கோலி அளித்துள்ள பதிலில், “ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக களம் இறங்குவார்கள். இதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. ஒருநாள் கிரிக்கெட்டை பொறுத்த வரையில் இதில் மாற்றம் தேவை இல்லை” என்று தெரிவித்தார். இந்நிலையில் ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் கடந்த 2013 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் முதல் இந்திய அணிக்கு அசைக்க முடியாத ஜோடியாக திகழ்ந்து வருகின்றனர். ஆனால் முதல் டி20 போட்டியில் வாய்ப்பு கிடைத்தும் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் கோட்டை விட்டார் தவான்.

தவான் துவக்க வீரராக களமிறங்க உள்ள நிலையில் ராகுல் ஐந்தாவது வீரராக களமிறங்குவது உறுதியாகியுள்ளது. டி20 கிரிக்கெட் தொடரைப் போல இல்லாமல் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான அணியில் ராகுல் விக்கெட் கீப்பராகவே இடம் பிடித்துள்ளார். இதனால் டெஸ்ட் போட்டியில் அசத்திய பின் டி20 திரும்பிய இளம் ரிஷப் பண்ட், ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான அணியில் இடம்பெறுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மூன்றாவது இடத்திலும் ஸ்ரேயாஸ் ஐயர் நான்காவது இடத்திலும் களமிறங்குவார் என்பதும் தெரியவந்துள்ளது.

கேப்டன் கோலி சொன்ன ஒரு வார்த்தை … இப்ப நாடு முழுதும் இதே பேச்சுதான்!

ஆல்ரவுடர் ஹர்திக் பாண்டியா ஆறாவது இடத்தில் களம் இறங்குவார் என்றும் குர்னால் பாண்டியா அல்லது வாஷிங்டன் சுந்தர் ஆகியோரில் ஒருவருக்கு இடம் கிடைக்கும் என்றும் தெரிகிறது. டி20 தொடரில் அறிமுகமாகி அசத்திய சூர்யகுமார் யாதவ் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தனது அறிமுக வாய்ப்பை இந்த தொடரில் பெறுவது சந்தேகம் என்ற நிலையே நீடிக்கிறது.

Views: - 30

0

0