கேப்டனாக ‘தல’ தோனியின் இந்த படுமோசமான சாதனையையும் சமன் செய்த கோலி!

5 March 2021, 12:59 pm
Quick Share

இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்டில் டக் அவுட்டான இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி, முன்னாள் கேப்டன் தோனியின் மோசமான சாதனையை சமன் செய்தார்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மோசமான பார்ம் இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியிலும் தொடர் கதையாகவே உள்ளது. இந்த டெஸ்டின் முதல் இன்னிங்சில் 8 பந்துகளை எதிர்கொண்ட கோலி, பென் ஸ்டோக்ஸ் வீசிய அசத்தல் பவுன்சரில் தனது விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெடில் கேப்டனாக 8வது முறையாகக் கோலி டக் அவுட்டானார். இதன் மூலம் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனியின் மோசமான சாதனையைச் சமன் செய்தார் கோலி.

எட்டு டக் அவுட்
தோனி இந்திய அணியின் கேப்டனாக அதிக டக் அவுட்களை பதிவு செய்துள்ளார். இவர் எட்டு முறை ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டாகியுள்ளார். தற்போது கோலி இந்த பட்டியலில் இணைந்துள்ளார்.

மேலும் இந்த தொடரில் கோலி ரன் எதுவும் எடுக்காமல் இரண்டாவது முறையாக அவுட்டானார். முன்னதாக சென்னையில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர் மொயின் அலி, கோலியை டக் அவுட்டாக்கினார். தற்போது பென் ஸ்டோக்ஸ் பந்தில் கோலி ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறியுள்ளார். மேலும் கடந்த 2014க்கு பின் கோலி முதல் முறையாக ஒரே தொடரில் இரண்டு முறை ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறியுள்ளார்.

கோலியின் மற்ற சாதனைகள்

  • டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலியின் 12வது டக் அவுட்.
  • இங்கிலாந்துக்கு எதிராகக் கோலியின் ஐந்தாவது டக் அவுட். மேலும் இங்கிலாந்துக்கு எதிராகக் கடைசி 7 இன்னிங்சில் கோலின் 3வது டக் அவுட்.
  • இந்த தொடரில் கோலியின் 2வது டக் அவுட்.
  • கோலியை 5 முறை அவுட்டாக்கிய வீரர்களான பாட் கம்மின்ஸ் , மொயின் அலி, ஸ்டுவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோரின் பட்டியலில் பென் ஸ்டோக்ஸும் இணைந்தார்.
  • ஒரே தொடரில் இரண்டு டக் அவுட்களை கோலி இரண்டாவது முறையாகப் பதிவு செய்தார்.

Views: - 24

0

0