‘தல’ தோனி சாதனையை ஓரங்கட்டிய ‘கிங்’ கோலி!

28 March 2021, 6:27 pm
Quick Share

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி, முன்னாள் கேப்டன் தோனியின் சாதனையைத் தகர்த்தார்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் மற்றொரு மைல்கல்லை தாண்டி அசத்தினார். இவர் முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி மற்றும் அசாருதீன் ஆகியோரின் பட்டியலில் இணைந்தார். இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் கேப்டனாக களமிறங்கிய விராட் கோலி சர்வதேச அரங்கில் 200 போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்ட மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார்.

சிறந்த கேப்டன்
இதற்கு முன்பாக மகேந்திர சிங் தோனி மற்றும் முகமது அசாருதீன் ஆகியோர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு தோனியிடம் இருந்து டெஸ்ட் கேப்டன் பொறுப்பை கோலி ஏற்றுக்கொண்டார். பிறகு 2017ஆம் ஆண்டு ஒருநாள் ஒருநாள் மற்றும் டி20 கேப்டன் பொறுப்பையும் கோலி ஏற்றுக்கொண்டார். அதன்பிறகு தற்போது வரை சர்வதேச கிரிக்கெட் அரங்கில் மிகச் சிறந்த தலைவராகக் கோலி செயல்பட்டு வருகிறார். தற்போது வரை இந்திய அணியை 60 டெஸ்ட் போட்டிகள், 45 டி20 போட்டிகள், மற்றும் 95 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தி வழி நடத்தியுள்ளார் கோலி.

தோனி ‘நம்பர்-1’
இதற்கிடையில் முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி இந்திய அணிக்காக 332 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ளார். மேலும் சர்வதேச அளவில் அதிக போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்ட வீரர் என்ற பெருமையும் தோனி வசமே உள்ளது. அசாருதீன் இந்திய அணியை 221 போட்டிகளில் வழி நடத்தியுள்ளார். இவரது தலைமையில் இந்திய அணி 3 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்ற போதும் ஒரு தொடரை வெல்லவில்லை. இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் மற்றும் டி20 தொடரை ஏற்கனவே இந்திய அணி கைப்பற்றியது. இந்நிலையில் கோலி தலைமையில் இந்திய அணி ஒருநாள் தொடரை வெல்லும் என்றும் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.

17 முறை
தவிர இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் 329 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் தொடர்ச்சியாக அதிக ஒருநாள் போட்டிகளில் 300 ரன்களை முதல் முறையாக இந்திய அணி கடந்து அசத்தியது. இதிலும் இந்திய கேப்டன் விராட் கோலி ஒரு சாதனை படைத்து தோனியின் சாதனையைத் தகர்த்துள்ளார். கோலி தலைமையிலான இந்திய அணி 17 முறை ஒருநாள் கிரிக்கெட்டில் 300 ரன்களை கடந்து அசத்தியது. முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் தலைமையில் இந்திய அணி 16 முறை 300 ரன்களை கடந்துள்ளது. தோனியின் இந்த சாதனையையும் கோலி இந்த போட்டியில் தகர்த்தார். இவர்கள் இருவரையும் தவிர்த்து சவுரவ் கங்குலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 9 முறை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் 300 ரன்களை கடந்து உள்ளது.

Views: - 52

1

0