தனது பயோகிராபி படத்தில் அவங்க நடித்தால் நான் நடிக்க ரெடியாக இருக்கிறேன் : நடிகையை திருமணம் செய்த வீரர் தகவல்!!

19 May 2020, 3:46 pm
india team - updatenews360
Quick Share

எனது மனைவி இடம்பெறும்பட்சத்தில், எனது வாழ்க்கை வரலாறு தொடர்பான படத்தில் நடிக்கத் தயார் என இந்திய அணியின் கேப்டன் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு சமயத்தில் வீரர்கள் தங்களின் பொழுதை போக்க இன்ஸ்டாகிராமில் லைவ் சேட் செய்து வருகின்றனர். அந்த வகையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரியுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

அப்போது, அவர் பேசியதாவது :- என்னுடைய வாழ்க்கை வரலாறு தொடர்பான படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தில் நான் நடிக்க தயாராக இருக்கிறேன். ஆனால், அந்தப் படத்தில் அனுஷ்கா சர்மாவும் நடிக்க வேண்டும். மக்கள் அனைவரிடத்திலும் கருணை உள்ளம் உள்ளது. ஆனால், அதனை வெளிக் கொண்டு வரும் நபர் இருப்பார். எனக்கு அப்படி திகழ்ந்தவர் அனுஷ்கா ஷர்மா. வாழ்க்கையை நமக்காக வாழக் கூடாது, பிறருக்காகவும் வாழ வேண்டும் என்பதை அவர் உணர வைத்தார்.

kohli - anushka sharma - updatenews360

சொந்த மாநில அணிக்கு என்னை தேர்வு செய்ய எனது தந்தையிடம் ஒரு நபர் லஞ்சம் கேட்டார். ஆனால், எனது தந்தை கொடுக்க மறுத்து விட்டு, தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்தால் செய்யுங்கள் எனக் கூறி விட்டார். அதனால், நான் நிராகரிக்கப்பட்டு விட்டேன். அதனை நினைத்து கதறி அழுதேன், எனக் கூறினார்.

Leave a Reply