காபா இவர்கள் தாபா… சுமார் 110 ஆண்டு சாதனையைத் தூள் தூளாக்கிய வாஷிங்டன் சுந்தர்!

17 January 2021, 4:37 pm
Washington Sundar - Updatenews360
Quick Share

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட் இந்திய வீரர் வாஷிங்டன் சுந்தர் மற்றும் சார்பில் தாகூர் ஆகியோர் பல சாதனைகளைத் தகர்த்தனர். குறிப்பாகச் சுந்தர் சுமார் ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த 110 ஆண்டுக்கால கிரிக்கெட் சாதனையைத் தகர்த்தார்.

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடக்கிறது. இதன் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 369 ரன்கள் எடுத்தது. இந்திய அணி 336 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது .இந்த போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் வாஷிங்டன் சுந்தர், சார்துல் தாகூர் ஆகியோர் பல்வேறு சாதனைகளைத் தகர்த்தனர்.

இந்திய அணி 186 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின் இணைந்த வாஷிங்டன் சுந்தர், தாகூர் ஜோடி அணியைச் சரிவில் இருந்து மீட்டது. மூன்றாவது நாள் ஆட்டத்தில் இருவரும் அரை சதத்தை பதிவு செய்து பல்வேறு சாதனைகளைத் தகர்த்தனர். சுந்தர் ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த டெஸ்ட் போட்டியில் 110 ஆண்டுகளாக நீடித்த சாதனையை தகர்த்து அசத்தினார். இப்போட்டியில் 62 ரன்கள் அடித்த சுந்தர் ஆஸ்திரேலிய மண்ணில் அறிமுக வீரராகக் களமிறங்கி முதல் டெஸ்டில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற நீண்ட நாள் சாதனை தகர்த்தார்.

இதற்கு முன்னதாக இங்கிலாந்தின் பிராண்ட் போஸ்டர், ஆஸ்திரேலிய மண்ணில் தனது அறிமுக போட்டியில் 7ஆவது வீரராகக் களமிறங்கி 56 ரன்கள் அடித்து இருந்ததே சாதனையாக இருந்தது. 110 ஆண்டுகளாக இந்த சாதனை தகர்க்கப்படாமல் இருந்தது. இன்றைய ஆட்டத்தில் சுந்தர் இதை உடைத்தார். மேலும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அறிமுக வீரராகக் களமிறங்கி தனது அறிமுக போட்டியில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்தார் சுந்தர். கடந்த 1996 இல் இங்கிலாந்து அணிக்கு எதிராக ராகுல் டிராவிட் ஏழாவது வீரராகக் களமிறங்கி 95 ரன்கள் அடித்தது அதிகபட்சம் ஆகும்.

அதேபோல தனது அறிமுக போட்டியில் அரைசதம் மற்றும் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய மூன்றாவது இந்தியர் என்ற பெருமை பெற்றார். ஹனுமா விஹாரி மற்றும் டாட்டு பட்கர் ஆகியோர் இம்மைல்கல்லை எட்டியுள்ளனர். அதேபோல இந்திய அணியின் மற்றொரு பவுலர் சார்துல் தாகூர் போட்டியில் 67 ரன்கள் அடித்தார். எட்டாவது வீரராகக் களமிறங்கிய ஆஸ்திரேலிய மண்ணில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்தார் தாகூர். இந்நிலையில் இவர்களின் சிறப்பான ஆட்டத்தை சமூகவலைத்தளத்தில் இந்திய ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக முன்னாள் இந்திய அணியின் துவக்க வீரர் சேவக் காபா இவர்களின் தாபா என்ற போக்கில் டிவிட்டரில் இவர்களை வாழ்த்தியுள்ளார். இதேபோல இந்திய ரசிகர்களும் இவர்களின் துணிச்சலான போராட்டத்தைப் பாராட்டி வருகின்றனர்.

Views: - 4

0

0