“கொரோனா வைரஸிற்கு நடுவே சில “முட்டாள்களையும்” சந்திக்கவேண்டியதுள்ளது” – ஹர்ஷா போக்லே ஆவேசம்…!

21 March 2020, 3:34 pm
Quick Share

நாளுக்கு நாள் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வருகின்ற நிலையில் உலகின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு திட்டங்கள் அந்த அந்த நாடுகளுக்கேற்ப தொடங்கிவருகின்றனர். இதுவரை இரண்டு லட்சம் 75 ஆயிரத்திற்கும் மேலானோர் பாதிப்படைந்துள்ளனர். 11402 பேர் தனது உயிரை பறிகொடுத்துள்ளனர். ஒரு லட்சம் பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.


வட இந்தியாவில் பலப் பகுதிகளில் கச்சேரி நடத்திவருபவர் பிரபல பாடகி கனிகா கபூர். இவர் சில தினங்களாக தீராத இருமலும் காய்ச்சலுமாக அவதிப்பட்டு வந்தார். சோதனைக்குப்பிறகு இவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. ஆனால் இவர் தனது கொரோனா இருப்பது தெரிந்தும் பொதுமக்களை மிகுதியாக பார்த்து பேசி வந்தார். லக்னோ மாநகரத்தில் மட்டும் மூன்று கச்சேரிகளையும் நடத்தியுள்ளார்.


இந்த செயலை கண்டித்து பிரபல கிரிக்கெட் ஆய்வாளர் மற்றும் தொகுப்பாளர் ஹர்ஷா போக்லே “கொரோனா வைரஸிற்கு நடுவே சில “முட்டாள்களையும்” சந்திக்கவேண்டியதுள்ளது. இதுபோன்ற மக்களை ஒதுக்கி வைப்பது நல்லது. எந்தவிதமான கவன சிதறலுமின்றி இந்த கொரோனாவை எதிர்க்கொள்வது நமது கடமை. அரசாங்கம் சொல்வதை இந்நேரம் கேட்பது நல்லது” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply