சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து பிரபல வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஓய்வு! காரணம் இதுவா?

4 November 2020, 12:27 pm
Samuels Retired - Updatenews360
Quick Share

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் மார்லன் சாமுவேல்ஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

2000ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமா வெஸ்ட் இண்டீஸ் வீரர் சாமுவேல்ஸ், 71 டெஸ்ட் போட்டிகள் 2017 ஒரு நாள் போட்டிகள், 67 டி20 கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.

2018ஆம் ஆண்டு கடைசியாக டிசம்பரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடியிருந்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 7 சதங்களும், ஒரு நாள் கிரிக்கெட்டில் 10 சதங்களும் விளாசியுள்ளார்.

Marlon Samuels finds support over Shane Warne remarks

மொத்தமாக டெஸ்டில் 3 ஆயிரத்து 917 ரன்களும், ஒரு நாள் ஆட்டத்தில் 5 ஆயிரத்து 606 ரன்களு, டி 20 போட்டிகளில் 1,611 ரன்கள் எடுத்துள்ள சாமுவேல்ஸ், வெஸ்ட் இண்டீஸ் வென்ற இரு டி20 உலக கோப்பை போட்டிகளிலும் இறுதி போட்டியில் மிகச்சிறப்பாக விளையாடி ஆட்டநாயகன் விருது பெற்றார்.

Marlon Samuels is no easy cricketer to love | Stuff.co.nz

2012ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் இலங்கைக்கு எதிராக 56 பந்துகளில் 78 ரன்கள் எடுத்தார். 1979க்கு பிறகு 2012ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலககோப்பை போட்டியில் சாம்பியன் ஆனது.

The history behind feud between Marlon Samuels and Shane Warne | Sports  News,The Indian Express

கொல்கத்தாவில் நடந்த டி20 உலககோப்பை இறுதிச்சுற்றில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 66 பந்துகளில் 85 ரன்கள் எடுத்து மீண்டும் தனது உலக கோப்பையை வெல்ல உதவிய சாமுவேல்ஸ், சர்வதேச கிரிக்கெட்டில் 152 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இந்தியாவில் எழுந்த மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டுகளில் சாமுவேல்ஸ் பெயரும் வந்தது நினைவுகூரத்தக்கது.

Views: - 27

0

0