மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்றுப் போட்டிகள் ஒத்திவைப்பு

12 May 2020, 7:24 pm
womens cricket - updatenews360
Quick Share

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பைக்கான தகுதி சுற்றுப் போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் – மே மாதங்கள் வரையில் நடக்கவிருந்த அனைத்து விளையாட்டு போட்டிகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இனி வரும் நாட்களில் திட்டமிட்ட தொடர்களாவது நடத்தப்படுமா..? என்பதும் சந்தேகத்திற்குரியதாகவே உள்ளது.

தற்போது கொரோனா வைரஸின் பாதிப்பு வேகமெடுத்துள்ள நிலையில், ஜூலை 3-ந்தேதியில் இருந்து 19-ந்தேதி வரை நடைபெற இருந்த 2021 மகளிருக்கான ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பைக்கான தகுதிச் சுற்று போட்டிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ஜுலையில் நடக்கவிருந்த 2022-ம் ஆண்டில் நடைபெற உள்ள U-19 உலக கோப்பை தொடருக்கான ஐரோப்பிய மண்டலத்திற்கான தகுதிச் சுற்று போட்டிகளும் ஒத்தி வைக்கப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது.