மூணு வருஷமா இதை கேட்டுக்கிட்டு தான் இருக்கேன்: அவருக்காக மாற்றிக்கொள்ள முடியாது: சகா!

25 January 2021, 8:04 pm
wriddhiman saha - updatenews360
Quick Share

இந்திய கிரிக்கெட் அணியின் ரிஷப் பண்ட்டிற்காக தனது ஆட்டத்தை மாற்றிக் கொள்ள முடியாது என சகா தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம் பல்வேறு ஹீரோக்கள் உருவாகியுள்ளனர். குறிப்பாக இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட். இவர் காபா மைதானத்தில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில் கடைசி வரை நிலைத்து நின்று ஆடி இந்திய அணியை வெற்றி பெறச் செய்ததோடு அணி தொடரை 2 – 1 என கைப்பற்ற மிகவும் முக்கிய காரணமாகவும் இருந்தார்.

இதையடுத்து இந்திய டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் விக்கெட் கீப்பர் விருத்திமான் சகா, ரிஷப் பண்ட்டுடன் ஒப்பீடு கிளம்பிய்ள்ளது. ஆனால் இதுதொடர்பாக சகா தரப்பில் தான் அவருக்காக தனது ஆட்டத்தை மாற்றிக்கொள்ள விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலில் இந்திய அணியில் இடம் பெற்றவர் சகா தான். ஆனால் இடையில் தனது வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளாத காரணத்தினால் அவருக்கு பதிலாக பண்ட் அணியில் இடம் பிடித்தார்.

இதுதொடர்பாக சகா கூறுகையில், “எனக்கும் மற்றவர்களுக்கும் கடந்த 2018 முதலே ஒப்பீடு உள்ளது. நான் எனது பணியை சிறப்பாக செய்து வருகிறேன் என நம்புகிறேன். அதற்காக பண்ட் எப்படி பேட்டிங் செய்கிறார் என்பது குறித்து நான் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. அவருக்காக நான் எனது ஆட்டத்தை மாற்றிக் கொள்ள விரும்பவில்லை. அணியில் யாரை சேர்ப்பது யாரை விக்கெட் கீப்பராக பயன்படுத்துவது என்பது நிர்வாகத்தின் முடிவாகும்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பர் பணி என்பது மிகப்பெரிய பொறுப்பாகும். ஒரு சிறு வாய்ப்பை தவறவிட்டால் போட்டியே கைநழுவிப்போகும் வாய்ப்பு உண்டு. அதற்காக நான் எனக்கு வரும் வாய்ப்புகள் அனைத்தையும் சிறப்பாக பயன்படுத்திக்கொள்கிறேன் என அர்த்தம் இல்லை. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் நுணுக்கம் தெரிந்த விக்கெட் கீப்பர் அவசியம்” என்றார்.

Views: - 7

0

0