கேப்டன் கோலியால் தலைநிமிரும் இந்தியா.. மோசமான வானிலையால் ஆட்டம் நிறுத்தம்…!!

19 June 2021, 8:48 pm
Quick Share

நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி சிறப்பான நிலையில் உள்ளது.

சவுதாம்டனில் நடந்து வரும் இந்தப் போட்டியின் முதல்நாள் ஆட்டம் மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, இன்று 2வது நாள் ஆட்டத்தின் போது டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, களமிறங்கிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா – கில் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ரோகித் சர்மா (34), சுப்மன் கில் (28) ஆட்டமிழந்ததை தொடர்ந்து, புஜாரா நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இருப்பினும், அவர் 8 ரன்களில் வெளியேறினார். ஒருபக்கம் விக்கெட்டுக்கள் சீரான இடைவெளியில் விழுந்தாலும் விராட் கோலி மட்டும் மறுமுனையில் நிதான ஆட்டத்தை தொடர்ந்தார். அவருடன் ஜோடி சேர்ந்த துணை கேப்டன் ரகானேவும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

3 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மோசமான வானிலையால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

Views: - 395

0

0