வருணபகவான் விட்ட வழி… டாஸில் வென்ற நியூசி… பேட்டிங் செய்யும் இந்திய அணி…!!

19 June 2021, 2:52 pm
india - nz - updatenews360
Quick Share

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா – நியூசிலாந்து அணிகள் தகுதி பெற்றன. இந்தப் போட்டி இந்திய நேரப்படி நேற்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், அதிகாலை முதலே போட்டி நடக்கும் சவுதாம்டனில் லேசான மழை பெய்து கொண்டே இருந்ததால், முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆட்டம் நாளை தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், சவுதாம்டனில் இன்று காலை முதல் வானம் வெட்ட வெளிச்சத்துடன் காணப்பட்டு வந்தது. இதைத் தொடர்ந்து, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் மைதானத்திற்கு சென்று டாஸ் போட்டனர். அதில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணி பேட்டிங் செய்யவிருக்கிறது.

Views: - 362

0

0