தனது 100வது டெஸ்டில் களமிறங்கிய இந்திய வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மாவிற்கு மரியாதை!

24 February 2021, 9:37 pm
Quick Share

தனது 100ஆவது டெஸ்டில் பங்கேற்கும் இந்திய வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மாவிற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் இந்திய வீரர்கள் மரியாதை அளித்தனர்.

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தின் மோதிரா மைதானத்தில் நடக்கிறது. இது இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளரான இஷாந்த் சர்மா பங்கேற்கும் 100 ஆவது டெஸ்ட் போட்டி ஆகும். இதன் மூலம் இஷாந்த் சர்மா சர்வதேச அரங்கில் 100 டெஸ்ட் போட்டியில் பங்கேற்ற இரண்டாவது இந்திய வேகப்பந்துவீச்சாளார் என்ற பெருமை பெற்றார்.

முன்னதாக முன்னாள் இந்திய கேப்டன் கபில் தேவ் ஒருவர் மட்டுமே இந்திய அணிக்காக 100 டெஸ்டில் பங்கேற்ற ஒரே இந்திய வேகப்பந்துவீச்சாளராவார். இந்நிலையில் இஷாந்த் சர்மாவிற்கு இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் இந்திய வீரர்கள் மரியாதை அளித்தனர். போட்டி துவங்குவதற்கு முன்பாக இஷாந்த் சர்மாவிற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நினைவுப்பரிசு ஒன்றை வழங்கினார். இதே போல இந்திய வீரர்களும் வரிசையாக நின்று மரியாதை அளித்தனர்.

இதற்குப் பின் இந்திய கேப்டன் விராட் கோலி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் அமைச்சர் அமித் ஷாவிற்கு இந்திய வீரர்களை ஒருவர் பின் ஒருவராக அறிமுக செய்தார். இதற்குப் பின் போட்டி துவங்கியது. இந்த போட்டியில் இந்திய அணிக்காக முதல் விக்கெட்டை இஷாந்த் சர்மா தான் வீழ்த்தினார். இதற்குப் பின் வரிசையாக ஒவ்வொரு விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 112 ரன்களுக்கு சுருண்டது.

Views: - 26

0

0