அதிக உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிடும் சூர்யா…. ஏன் தெரியுமா? ஜோ சொன்ன சீக்ரெட்ஸ்!

Author: Shree
30 November 2023, 3:57 pm
surya jyothika
Quick Share

புஷ் புஷ் நடிகையாக கொழுக் மொழுக் அழகியாக அக்கட தேசத்தில் இருந்து தமிழ் சினிமாவிற்கு நடிக்க வந்தவர் நடிகை ஜோதிகா. இந்தி சினிமாவில் நடித்து தனது கெரியரை ஆரம்பித்த ஜோதிகா வாலி படத்தில் காமியோ ரோலில் நடித்து அறிமுகமானார் .

முதல் படத்திலே நல்ல அறிமுகத்தை பெற்ற அவர் தொடர்ந்து பூவெல்லாம் கேட்டுப்பார், சிநேகிதியே, குஷி, பூவெல்லாம் உன் வாசம், பிரியமான தோழி, தூள், காக்க காக்க, மன்மதன், பேரழகன், சந்திரமுகி, சில்லுனு ஒரு காதல் இப்படி பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

காக்க காக்க படத்தில் நடித்த போது நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். சிவகுமாருக்கு தன் மகன் ஒரு நடிகையை திருமணம் செய்வதில் விருப்பமே இல்லையாம். தன் ஜாதியில் பெண் எடுத்து திருமணம் செய்யவேண்டும் என எண்ணியதாகவும் அது நடக்காததால் மிகவும் வருத்தப்பட்டதாக சிவகுமாரே பேட்டி ஒன்றில் கூட கூறியிருந்தார்.

திருமணத்திற்கு பின்னர் நடிக்காமல் இருந்து வந்த நடிகை ஜோதிகா தொடர்ந்து திரைப்படங்களில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ரோலில் நடித்து வருகிறார். கடைசியாக மம்முட்டிக்கு ஜோடியாக Kaathal – The Core திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இப்படத்தின் புரொமோஷன் போது இயக்குனர் ஜியோ பேபி ஒரு பேட்டியில், இப்பட கதை கூற சென்னையில் ஜோதிகா வீட்டிற்கு சென்றபோது, சூர்யா அவரது கையாலேயே அனைவருக்கும் தேநீர் வழங்கி உபசரித்தார். அதுமட்டுமல்லாமல் நிறைய உணவுகளை ஆர்டர் செய்து எல்லோருக்கும் பரிமாறினார்.

அது குறித்து ஜோதிகாவிடம் கேட்டதற்கு, ஆம், சூர்யா நிறைய உறவினர்கள் வீட்டிற்கு வரும் போது அவருக்கு பிடித்த நிறைய உணவுகளை ஆர்டர் செய்துவிடுவார். காரணம் அந்த நேரத்தில் தான் அவரால் அதிகம் சாப்பிட முடியும் என்பதால் என்று ஜோதிகா கூறினார்.

Views: - 193

0

0