ஹெல்மெட் அணிந்தவர்களுக்கு SWEET..அணியாதவர்களுக்கு ASSIGNMENT : திருக்குறளை எழுத வைத்து நூதன தண்டனை வழங்கிய காவல்துறை!!

Author: Udayachandran RadhaKrishnan
22 April 2022, 5:58 pm
Helmet Awareness- Updatenews360
Quick Share

பழனி : ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டி வந்தவர்களுக்கு திருக்குறள் எழுதவும், இனிமேல் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டுவேன் என எழுதக்கூறி மாவட்ட எஸ்பி சீனிவாசன் நூதன தண்டனை வழங்கினார்.

பழனியில் திண்டுக்கல் மாவட்ட‌ காவல்துறை‌ சார்பில் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் பங்கேற்றார்.

அப்போது ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அப்பொழுது அவ்வழியே ஹெல்மெட் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகள் வழங்கிய காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் ஹெல்மெட் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு திருக்குறளை எழுத கூறியும், இனி ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டுவேன் என நூறுமுறை எழுத கூறியும் நூதன தண்டனை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Views: - 510

0

0