தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 48 பேர் உயிரிழப்பு… சென்னையில் மட்டும் 21 பேர் பலி…

Author: Babu Lakshmanan
25 January 2022, 7:56 pm
karur corona ward - updatenews360
Quick Share

சென்னை: தமிழகத்தில் மேலும் 30,055 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மேலும் 30,055 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31 லட்சத்து 94 ஆயிரத்து 260 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 11 ஆயிரத்து 270 ஆக அதிகரித்துள்ளது. இன்று 48 பேர் உயிரிழந்துள்ளார்.

இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37 ஆயிரத்து 312 ஆக அதிகரித்துள்ளது. இன்று 25,221 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 29 லட்சத்து 45 ஆயிரத்து 678 ஆக அதிகரித்துள்ளது. இதில். அதிகபட்சமாக சென்னையில் 6,241 பேருக்கும், இதற்கு அடுத்தபடியாக கோவையில் 3,763 பேருக்கும், மூன்றாவது இடத்தில் செங்கல்பட்டில் 1,737 பேருக்கும், திருப்பூரில் 1,490 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Views: - 1001

0

0