பிறந்து 10 நாட்களே ஆன ஆண் குழந்தை : சாக்கு மூட்டையில் இருந்து உயிருடன் மீட்பு!!

By: Udayachandran
16 October 2020, 2:42 pm
born Baby Rescue - Updatenews360
Quick Share

தஞ்சாவூர் : பூதலூர் அருகே வில்லவராயன்பட்டி அருகே சாக்கில் வைத்து முட்புதரில் வீசப்பட்ட பிறந்து 10 நாட்களே ஆன ஆண் குழந்தை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.

தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே உள்ள வில்லவராயன்பட்டி ஆதிதிராவிட புதுக்காலனி அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைந்துள்ளது. இதன் அருகே உள்ள பாலத்தில் முட்புதரில் தனியாக பாலிதீன் சாக்கு சுற்றப்பட்டு கிடந்தது.

அந்த சாக்கில் இருந்து பயங்கர சத்தத்துடன் குழந்தையின் அழுகுரல் கேட்டது. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து அந்த சாக்கை பிரித்து பார்த்தனர். அதில் பிறந்து 10 நாட்களே ஆன ஆண் குழந்தை இருந்தது. உடனடியாக அந்த பச்சிளங்குழந்தையை தூக்கி கொண்டு பூதலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

மேலும் இது குறித்து தஞ்சை சைல்டு லைனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அதிகாரிகள் விரைந்து வந்து பச்சிளங்குழந்தையை அங்கிருந்து ஆம்புலன்சில் தஞ்சை அரசு மருத்துவமனை குழந்தைகளை பிரிவுக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது குழந்தை ஆரோக்கியமான நிலையில் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.இது குறித்து பூதலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையை சாக்குபையில் வைத்து யார் விசி சென்றது எதற்காக அப்படி செய்தனர் குழந்தையின் பெற்றோர் யார் என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 40

0

0