ஆந்திர அணையில் இருந்து 1000 கனஅடி நீர் திறப்பு : கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!!

29 November 2020, 1:17 pm
Kosasthalai - Updatenews360
Quick Share

ஆந்திரா : கிருஷ்ணாபுரம் அம்மா பள்ளி அணையில் இருந்து திறக்கப்படும் நீர் அதிகரிப்பால் கொசஸ்தலை ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் கிருஷ்ணாபுரம் அம்மா பள்ளி அணையில் நீர்வரத்து அதிகரிப்பால் இன்று காலை விநாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்த தண்ணீர் தமிழக எல்லையில் உள்ள பள்ளிப்பட்டு கொசஸ்தலை ஆற்றில் கலந்து சானாக்குப்பம், கிழ்கால் பட்டறை, நெடியம் ஆகிய பகுதிகளில் வழியே ஆந்திர மாநிலம் நகரி லவகுசா ஆற்றின் வழியாக திருத்தணி தாலுகா நல்லாட்டூர் என்.என்.கண்டிகை வழியாக பூண்டி வந்தடையும்.

இதனால் பூண்டிக்கு நீர் வரத்து அதிகரிக்கும் என்பதால் கொசஸ்தலை ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Views: - 21

0

0