விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த 105 சவரன் தங்கம் : கழிவறையில் விட்டு சென்ற கடத்தல்காரர்கள்!!

2 March 2021, 1:38 pm
Gold in Aiport -Updatenews360
Quick Share

திருச்சி : திருச்சி விமான நிலையத்தில் கழிவறையில் 40லட்சம் மதிப்புள்ள தங்கத்தை போட்டுச் சென்ற மர்ம நபர்கள் யார் என அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி விமான நிலையத்திற்கு சிங்கப்பூர், துபாய், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு கொரோனா நோய் தொற்று காரணமாக சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் விமான நிலைய இமிகிரேஷன் அருகில் உள்ள கழிவறையில் விமான நிலைய ஊழியர் ஒருவர் சுத்தம் செய்ய சென்றுள்ளார்.

அப்போது அங்கு 40லட்சம் மதிப்புள்ள 840 கிராம் தங்க நகைகள் கிடந்துள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து உள்ளார்.

உடனே அங்கு வந்த அதிகாரிகள் தங்கத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். வெளிநாடுகளில் இருந்து வந்த மர்ம நபர் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு பயந்து கடத்தல் தங்கத்தை கழிவறையில் விட்டுச் சென்றது தெரியவந்தது. மேலும் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

Views: - 9

0

0