திருச்சியில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் தங்கம் கடத்த முயற்சி ; வசமாக சிக்கிய பயணி… ரூ.13 லட்சம் தங்கம் பறிமுதல்

Author: Babu Lakshmanan
9 November 2022, 8:58 am
Quick Share

திருச்சி விமான நிலையத்தில் 13 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், பயணியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு சிங்கப்பூர், துபாய், மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமான சேவை நடைபெற்று வருகிறது. இந்த விமானத்தில் அடிக்கடி கடத்தல் நகைகள், தங்கங்கள் பறிமுதல் செய்வதும் பலர் கைது செய்யப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் உள்நாட்டு விமான சேவையிலேயே தங்கம் கடத்துவது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. நேற்று மாலை திருச்சியில் இருந்து சென்னை செல்லும் விமானத்திற்கு வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது, ஒரு பயணியின் உடைமைகளை சோதனை செய்தபோது, அதில் தங்க கட்டிகளை கம்பிகளாக மாற்றி கடத்த முயற்சி தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைப்பற்றப்பட்ட 29.5 கிராம் கொண்ட மதிப்பு ரூபாய் 13.36 லட்சம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Views: - 578

0

0