வாகன சோதனையின் போது சிக்கிய 15 கிலோ கஞ்சா : இரண்டு பேரை கைது செய்து விசாரணை!!

14 July 2021, 2:14 pm
Cannabis- Updatenews360
Quick Share

கோவை : மேட்டுப்பாளையம் போலீசாரின் வாகன சோதனையில் 15 கிலோ கஞ்சாவுடன் இருசக்கர வாகனத்தில் சுற்றித்திரிந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் டூ சிறுமுகை சாலையில் நேஷனல் பள்ளி அருகில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக காவல் ஆய்வாளர் சிவக்குமாருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது.

உடனடியாக களத்தில் இறங்கிய மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் சிவக்குமார்,உதவி ஆய்வாளர்கள் தாமோதரன், செல்வநாயகம், தனிப்பிரிவு காவலர் ராஜேஷ், தலைமைக்காவலர் சிவராஜ், காவலர்கள் சதாசிவம், தாமோதரன் உள்ளிட்ட காவல் துறையினர் சிறுமுகை நேஷனல் பள்ளி அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது,பஜாஜ் பிளாட்டினா இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

போலீசாரின் கிடுக்குப்பிடி விசாரணையில் ஒருவர் மேட்டுப்பாளையம் மேதர் பிள்ளையார் கோவில் தெருவினை சேர்ந்த மகேஷ் ( வயது 32 ) என்பதும்,மற்றொருவர் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அங்கப்பள்ளியை சேர்ந்தவர் என்பதும்,இருவரும் சேர்ந்து தங்களது இருசக்கர வாகனத்தில் 15 கிலோ கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து அவர்களை கைது போலீசார் அவர்களிடமிருந்து 15.700 கிலோ கஞ்சாவினையும், கடத்தலுக்கு பயன்படுத்தியதாக ஒரு டூவீலரையும் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட கஞ்சாவின் மதிப்பு சுமார் ரூ.5 லட்சம் இருக்கலாம் என கூறப்படுகிறது.

மேட்டுப்பாளையம் பகுதியில் 15 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 86

0

0