அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ஏமாந்துபோன பெண்… ரூ.15 லட்சத்தை சுருட்டிய இளைஞர் கைது…!!

Author: Babu Lakshmanan
28 July 2022, 7:46 pm
Quick Share

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த மோசடியாளர் வங்கியில் 15 லட்சம் ரூபாய் ரொக்கத்தை கட்டினால் அதிக வட்டி கிடைக்கும் எனது நூதன மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள ஜோதிபுரத்தில் ராணியும், பாக்கியலட்சுமியும் அருகருகே வசித்து நண்பர்களாக பழகி வந்தனர். இந்த நிலையில் ராணி தனது வீட்டில் 15 லட்ச ரூபாய் ரொக்கம் வைத்துள்ளார்.

இதனை அறிந்த பாக்கியலட்சுமி அவரிடம் சென்று எதற்கு இவ்வளவு பணத்தை கையில் வைத்துள்ளீர்கள் என்றும், எனது மகன் சதுர்வேத கிரிநாதன் (35) தனியார் வங்கியில் (டச் பேங்க்) மேலாளராக வேலை செய்து வருகிறார் என்றும், அவரின் வங்கியில் பணத்தை செலுத்தினால் திருமண காலம் வரும் வரை அதிக வட்டி கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

இதனை நம்பி ராணி சதுர்வேதகிரிநாதனிடம் கடந்த 2016 ல் ரூ.15 லட்சத்தை வீட்டில் வைத்து கொடுத்தார். இதற்கு அடுத்த நாள் சதுர்வேதகிரிநாதன் வங்கியை போலவே போலி ரசீதும் கொடுத்துள்ளார். சில வருடங்கள் கழித்து ராணி, பாக்யலட்சுமியிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டார். அப்போது அவர் தந்துவிடுவதாக கூறி வருடங்களை கடத்தி வந்தார்.

இதையடுத்து, ஏமாற்றப்பட்டதை அறிந்த ராணி கடந்த 2020 ஆம் ஆண்டில் சதுர்வேத கிரிநாதன் மற்றும் அவரது தாயார் பாக்கியலட்சுமி மீதும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி தலைமறைவாக இருந்த சதுரகிரி வேத கிரிநாதனை நேற்று இரவு கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 470

0

0