அரசுப் பேருந்தில் 18 கிலோ வெள்ளி, தங்கம் பறிமுதல் : ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை!!

Author: Udayachandran RadhaKrishnan
30 September 2021, 2:11 pm
18 Kg Silver Seized -Updatenews360
Quick Share

மதுரை : தூத்துக்குடியில் இருந்து பேருந்தில் உரிய ஆவணமின்றி மதுரைக்கு கொண்டு வரப்பட்ட 12 லட்சம் மதிப்புள்ள 18 கிலோ எடையுள்ள வெள்ளி, 15 கிராம் தங்கம் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடியில் இருந்து மதுரைக்கு அரசு பேருந்தில் உரிய ஆவணமின்றி வெள்ளிக் கொலுசு , வெள்ளி காப்பு உள்ளிட்ட 18 கிலோ எடையுள்ள வெள்ளி மற்றும் 15 கிராம் பொருட்களை காவல்துறை மற்றும் வணிக வரித்துறை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மதுரை ஐராவதநல்லூர் பகுதியை சேர்ந்த மகேந்திரன் என்பவரை பிடித்து வணிக வரித்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் விசாரணையில், மதுரையில் உள்ள பிரபல நகை கடைக்கு விற்பனைக்காக இந்த பொருளை கொண்டு வந்ததாக மகேந்திரன் தெரியப்படுத்தியுள்ளார்

மேலும் இந்தப் பொருட்களின் மதிப்பு 12 லட்ச ரூபாய் ஆகும், மேலும் இதற்கு 3 சதவீதம் வரி மற்றும் அதற்கு அபராதமும் செலுத்தினால் பறிமுதல் செய்த பொருட்களை கடைக்காரரிடம் வழங்க உள்ளனர்.

Views: - 253

0

0