நீட் தேர்வு அச்சம் : மேலும் ஒரு மாணவி தூக்கிட்டு தற்கொலை..!

12 September 2020, 9:04 am
Quick Share

நீட் தேர்வு பயத்தால் மதுரையில் 19 வயது மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

மருத்த மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவு தேர்வு நாடு முழுவதும் நாளை நடைபெறவுள்ளது. இந்த நுழைவுத் தேர்வை எழுத நாடு முழுவதும் 15 லட்சத்து 97 ஆயிரத்து 433 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இவர்கள் தேர்வு எழுதுவதற்காக 3842 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 14 நகரங்களில் 240 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இவற்றில் 1 லட்சத்து 17ஆயிரத்து 990 மாணவர்கள் நீட் தேர்வு எழுத உள்ளனர். தேர்வு மையங்களில் கொரோனா பாதுகாப்பு விதிகளை பின்பற்றி நாளை மதியம் 2 மணி முதல் 5 மணி வரை தேர்வு நடைபெறவுள்ளது.

இந்த சூழலில், நீட் தேர்வு எழுத தயாராகி வந்த மதுரையை சேர்ந்த மாணவி ஜோதி துர்கா அச்சம் காரணமாக இன்று காலை அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இவர், காவல்துறை எஸ்.ஐ. முருகசுந்தரம் என்பவரது மகள் என்ற விவரம் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

சமீபத்தில் அரியலூரைச் சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டநிலையில், நீர் தேர்வால் உயிரை மாய்த்துக்கொள்ளும் மாணவர்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

நீர் தேர்வை ரத்து செய்யக்கோரி ஆயிரம் வழக்குகள், போராட்டங்கள் நடத்தப்பட்டும் அதற்கு பலனின்றி போனதால் அனிதாவை தொடர்ந்து அடுத்தடுத்து மாணவர்கள் தற்கொலை செய்து மடிவது வேதனை அளிப்பதாக அமைந்துள்ளது என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Views: - 0

0

0