சிறுத்தை தாக்கி 2 பேர் பலி… மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறை : நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்!

Author: Udayachandran RadhaKrishnan
7 January 2024, 3:47 pm
Leopard
Quick Share

சிறுத்தை தாக்கி 2 பேர் பலி… மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறை : நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்!

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சிறுத்தை தாக்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே சரிதா என்பவரை தாக்கியதில் அவர் உயிரிழந்த நிலையில், வடமாநிலத்தை சேர்ந்த சிறுமி சிறுத்தை தாக்கியதில் உயிரிழந்தார்.

இதையடுத்து அப்பகுதி மக்கள மறியலில் ஈடுபட்டனர். வன்த்துறையினர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து, சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

இந்த நிலையில் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
நீலகிரி மாவட்டம் ஏலமன்னா கிராமம், மேங்கோ ரேன்ஜ் அஞ்சல் பகுதியைச் சேர்ந்த சரிதா (வயது 29) என்பவர் கடந்த (29.12.2023)-ம் தேதி அன்றும், மேங்கோ ரேன்ஜ் (அஞ்சல்), எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பு ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சிறுமி நான்சி என்பவர் கடந்த (06.01.2024) அன்றும் சிறுத்தை தாக்கியதன் காரணமாக உயிரிழந்தார்கள் என்ற துயரகரமான செய்தியை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.

விலை மதிப்பில்லாத இரண்டு உயிரிழப்புகளை சந்தித்துள்ள குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும். வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவியாக தலா 10 லட்சம் ரூபாய் தமிழக அரசின் சார்பில் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

Views: - 1153

0

0