‘ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்தால் ஒன்னும் ஆகாது’… அதிக போதைக்காக சானிடைசரை குடித்த நண்பர்கள்… கும்பகோணத்தில் அதிர்ச்சி சம்பவம்..!!

Author: Babu Lakshmanan
22 September 2023, 1:43 pm
Quick Share

கும்பகோணத்தில் போதைக்காக சானிடைசர் குடித்த இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே காவிரி சக்கரபடிதுறையில் மர்மமான முறையில் இருவர் இறந்து கிடப்பதாக இக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில், காவிரி சக்கரபடி துறையில் அமர்ந்து கருணகொல்லைத் தெருவை சேர்ந்த சௌந்தர்ராஜன் (42), பாலக்கரை பெருமாண்டி தெருவை சேர்ந்த பாலகுரு(43) உட்பட நான்கு பேர் நேற்று மாலை அமர்ந்துள்ளனர். அப்போது, சௌந்தர்ராஜன் மற்றும் பாலகுரு தண்ணீரில் சானிடைசர் கலந்து குடித்துள்ளனர். இதனைப் பார்த்த ஒருவர் சானிடைசர் குடித்தால் இறந்து விடுவாய் என எச்சரித்துள்ளார்.

இருப்பினும் இருவரும் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து குடித்தால் ஒன்னும் ஆகாது என போதைக்காக குடித்துள்ளனர். மேலும், சிரஞ்சீவி மூலமாக சானிடைசரை உடலில் ஏற்றியதாகவும் முதற்கட்ட தகவல் தெரிய வந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சானிடைசர் குடித்து இறந்தார்களா அல்லது வேறு ஏதும் காரணமா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போதைக்காக சனிடைசர் கலந்து குடித்து இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 134

0

0